ஜெ., மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதா? சசிகலாவுடன் பேசுவதை தவிர்த்தாரா? ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் வெளியான தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2022, 11:57 am
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’ அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன
ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார் 2 மாதத்திற்கு பின் இங்கிலாந்து மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசிவரை நடக்கவில்லை? என தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.