இந்தியா – பாக் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்.. கொந்தளித்த அமைச்சர் உதயநிதி!!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2023, 12:15 pm
இந்தியா – பாக் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்.. கொந்தளித்த அமைச்சர் உதயநிதி!!
நேற்று பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த இந்த பாகிஸ்தான் மேட்சில்.. இந்திய ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளது.
இந்திய ரசிகர்கள்.. பாகிஸ்தான் வீரர்களை தொடர்ந்து மோசமாக நடத்தி கோஷங்களை எழுப்பினர். உதாரணமாக டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர்.
அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.
முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியமாக கிரிக்கெட் என்ற போட்டி ஒன்றில் இப்படி மத ரீதியான கோஷங்களை எழுப்புவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். அரசியல், மதத்தை கிரிக்கெட் உடன் சேர்ப்பது.. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மோசமாக நடத்துவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.,
உதயநிதி ஸ்டாலின் கோபம்: இந்த நிலையில் விளையாட்டு என்பது இருநாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாக்.வீரர் அவுட் ஆன போது ஜெய்ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷம் எழுப்பிய வீடியோவை பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
அதில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் புதிய குறைவு. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது, என்று கூறியுள்ளார்.
ஷகீன் அப்ரிடி, பாபர் ஆஸம், ரிஸ்வான், ரஃப் ஆகியோரின் படையை மிக எளிமையாக துவம்சம் செய்து.. கிரிக்கெட் இவ்வளவு ஈஸியா என்று கேட்கும் அளவிற்கு எளிமையான மேட்சை ஆடி அசத்தி உள்ளது இந்திய அணி. இந்த மேட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரன்கள்.. ஷ்ரேயாஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் எளிதாக 30.3 ஓவரில் இந்திய அணி வென்றது.
0
0