ஜால்ரா போடுறதுதான் அண்ணாமலைக்கு வேலையே.. ஆனா பாஜகவினருக்கு அல்ல : கொதித்த காயத்ரி ரகுராம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 4:04 pm

அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் வைக்காத குற்றச்சாட்டே இல்லை என்று கூறும் அளவுக்கு, தினம் தினம் டிசைன் டிசைனாக புகார்களை அடுக்கி வருகிறார். அள்ளி விடுகிறார். அவருக்கு சவால் விடுக்கவும் செய்கிறார்.

அவருடைய இந்த திடீர் விஸ்வரூபம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ஓரளவு ஏற்க கூடியதுதான்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கங்களில் ஒன்றான வாய்ஸ் ஆப் சவுக்கு என்ற பக்கத்தின் அட்மினை நேற்று போலீசார் கைது செய்தனர்.

வாய்ஸ் ஆஃப் சவுக்கு பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் சென்னை போலீசாரால் நேற்று இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதாவது, சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்தவரை கைது செய்து சர்வாதிகாரப் போக்கை திமுக அரசு வெளிப்படுத்தியுள்ளது ; ஒரு குடும்பத்தின் கையில் அதிகாரம் இருந்தால் இதுதான் நிலை. சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து கருத்து பதிவிடுவது குற்றம் என்றால், திமுகவின் ஐடி விங் முழுநேர வேலையே இதுவாகத்தான் இருக்கிறது
கருத்து சுதந்திரத்தை பறிப்பது, நள்ளிரவில் கைது செய்வது, எந்த சாதனையும் இல்லாமல் வெறும் சுய விளம்பரம் போன்றவை பாசிசவாதியின் உண்மையான குணம், முதலமைச்சர் ஸ்டாலின்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள காய்த்ரி ரகுராம், நீங்கள் அண்ணாமலைக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்து வழிகாட்டினீர்கள். ஆனால், பாஜக அல்லாத சவுக்குப் பொறுப்பாளர்கள் தவறான உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்காக குரல் எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அண்ணாமலைக்குக் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டீர்கள். தயவு செய்து ஒன்று செய்யுங்கள் அண்ணாமலையை “சவுக்கு வார்ரூம்” தலைவராக்குங்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை கேலி செய்வது சரியல்ல. அண்ணாமலை தனது சொந்த பாஜக காரர்களுக்காக ஒருபோதும் குரல் எழுப்பவில்லை, ஆனால் அவர் தனது ஜால்ராக்களுக்காக குரல் எழுப்புகிறார். இது அவரது தோல்வியை காட்டுகிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ