சென்னை : சசிகலா, தினகரன் கட்சியில் இருந்தால் பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ்.நம்புவதாக அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;- அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு யார் காரணம் என்ற தகவலை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். போடி தொகுதியில் ஜானகி கட்சியில் தலைமை ஏஜண்டாக ஓ.பி.எஸ் இருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறானது செய்தி. பொய்யான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஜானகி ஒன்றும் தீண்ட தகாதவர் இல்லை, இரட்டை இலை-க்காக தியாகம் செய்தவர் ஜானகி.
எடப்பாடி பழனிசாமியின் சமீப கால பேச்சு கட்சியை ஒற்றுமைப்படுத்துவதாக எனக்கு தெரியவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமை ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைகாட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறும் அளவிற்கு தான் எடப்பாடிக்கு தகவல் தெரியும். யாரோ ஒருவரின் பிடியில் கட்சி செல்ல கூடாது என கூறிதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் மேற்கொண்டார்.
தற்போது கட்சியின் ஒற்றுமைக்காகவும் ,வளர்ச்சிக்காக மட்டுமே ஓபிஎஸ் அனைவரையும் அரவணைத்து வருகிறார். ஒரு குடும்பத்திற்குள் கட்சி சென்று விடக்கூடாது என அன்று சொன்னோம். அதேபோல, இப்போது கட்சி 5 பணக்காரர்களுக்குள் செல்லக் கூடாது என தெரிவித்து வருகிறோம். காவல்துறை முழுமையான சிசிடிவி காட்சியை வெளியிட்டால் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும்.
சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ். நம்புகிறார். எப்போது சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஓபிஎஸ் தான் முடிவு செய்வார், என தெரிவித்தார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.