மீண்டும் பயமுறுத்தும் ஜிகா: 26 கர்ப்பிணிகள் பாதிப்பு: பொதுமக்களே உஷார் சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

Author: Sudha
7 August 2024, 2:13 pm

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 முதல் 78 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு மிகப்பெரும் தொற்று நோயாக உருவெடுத்தது. 2015-ல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது. தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே, ஜிகா வைரஸ் பரவுகிறது. கர்ப்பிணி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுவரை 4 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.ஜிகா வைரஸ் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ”பாதிக்கப்பட்ட 26 கர்ப்பிணிப் பெண்களின் நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலோர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்” என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.பொதுமக்களே பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…