மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 முதல் 78 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு மிகப்பெரும் தொற்று நோயாக உருவெடுத்தது. 2015-ல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது. தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே, ஜிகா வைரஸ் பரவுகிறது. கர்ப்பிணி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுவரை 4 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.ஜிகா வைரஸ் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ”பாதிக்கப்பட்ட 26 கர்ப்பிணிப் பெண்களின் நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலோர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்” என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.பொதுமக்களே பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள "ராபின் ஹுட்" திரைப்படம் மிகுந்த…
ஐபிஎல் ஒரிஜினல் பிளேயர் விராட் கோலி ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் மார்ச் 22ஆம்…
கணவரை பாதுகாக்க போராடுகிறேன்.! நடிகர் மதுரை முத்து விஜய் டிவியின் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.மேலும்…
18வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள மகேந்திர சிங் தோனி, இதுவரை ஐபிஎல் போட்டிகளில் படைத்த சாதனைகளைப் பார்க்கலாம். சென்னை: சர்வதேச…
கணவருடன் பிரிந்துவிட்டாரா பாவனா நடிகை பாவனா மலையாளம்,தமிழ்,கன்னட திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நடிகையாவார்.இவர் 2018ஆம் ஆண்டு,கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் நவீனை…
ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு கிடையாது என திட்டவட்டமாக அதிமுக தெரிவித்துள்ள நிலையில், திமுக பக்கம் பிரேமலதா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…
This website uses cookies.