வேலூர் : ஆளும் திமுகவின் பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்ள குடியாத்தம் வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , அவர் பேசியதாவது :- ஆளும் திமுக இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்து வருகிறது. அந்த பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைவது என்பது எல்லோருடைய கருத்தாகவும், என்னுடைய கருத்தாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது நான் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக ஆட்சியில் நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை.
மேலும், சென்னையில் கடலின் நடுவே கலைஞரின் பேனா வடிவில் சிலை வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் நான் கூட பேரறிஞர் அண்ணாவின் புத்தகத்தை வைக்கலாம் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? காமராஜர் சிலையை வைப்பேன் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என தெரிவித்தார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.