ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் தொண்டங்கி மண்டலம், ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்த ஏ.அனந்தலட்சுமி (55) என்பவருக்கு வலது கால் மற்றும் வலது கையை இழுத்தபடி இருந்ததால் பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்து சென்று காண்பித்தனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிக செலவு அதிகம் என்றும், குணப்படுத்துவது கடினம் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் அனந்தலட்சுமிக்கு தலைவலி, மயக்கம் மற்றும் உடலின் வலது பக்கம் உணர்வின்மை காரணமாக கடந்த 11ம் தேதி காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூளையின் இடது பக்கத்தில் 3.3×2.7 செ.மீ கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் லாவண்யா குமாரி மற்றும் நரம்பியல் டாக்டர் விஜயசேகர், மயக்கவியியல் டாக்டர் விஷ்ணுவர்தன் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து கட்டியை அகற்ற முடிவு செய்தனர்.
இதற்காக செவ்வாய்கிழமையன்று, குறைந்த மயக்கத்தில் அனந்தலட்சுமி விழித்திருக்கும் போது அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: தங்கம் விலை சரிந்தது.. நகை வாங்க சரியான நேரம் : இன்றைய விலை நிலவரம்!!
அதன்படி அனந்தலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஜுனியர் என்.டி.ஆர். காமெடி நடிகர் பிரம்மானந்தம் இணைந்து நடித்த ‘அதுர்ஸ்’ படத்தை டேப்பில் ரசித்துக் பார்த்து கொண்டிருந்த போது, வலி தெரியாமல் நரம்பியல் அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களின் மேற்பார்வையில் சுமார் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது.
அதன் பிறகு எழுந்து அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். ஜிஜிஹெச்சில் முதல்முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐந்து நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.