பகலில் JUDGE… இரவில் PORN STAR : ஆபாச வீடியோவால் சிக்கிய இளம் நீதிபதி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 2:38 pm

அமெரிக்காவில் நியூயார்க்கில் நிர்வாக ரீதியான நீதிபதியாக இருந்தவர் கிரேகோரி ஏ லோக். 33 வயதாக இவர் ட்விட்டர் உள்ளிட் தளங்களில் FAKE ID மூலம் ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை பகிர்ந்து வந்துள்ளார்.

தனது பணி நேரம் முடிந்த பிறகு, ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். தனது படங்களைப் பார்க்க அவர், ரசிகர்களிடம் மாதம் ரூ. 987 ($12) வசூலித்துள்ளார்.

இப்படி அவர் தனது ஒன்லி ஃபேன்ஸ் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களைத் தயாரித்து நடித்துள்ளதாகவும் தெரிகிறது.
அவர் தனது பயோவில் நீதிபதி என்று எங்கும் குறிப்பிடவில்லை.. பயோவில் “பகலில் நல்ல ஒரு வேலையைச் செய்து வருகிறேன். இரவில் இது போன்ற டர்டி வேலையில் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஒன்லி பேன்ஸ் தளத்தில் மட்டுமின்றி மற்றொரு ஆபாசப் படத் தளத்திலும் அவர் கணக்கு வைத்துள்ளார். அங்கே அவர் ஆபாசப் படங்களைப் பார்க்க 10 டாலரை வசூலித்து வருகிறார். இது சமீபத்தில் தான் அங்கே வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அவரது செயல்பாடு மோசமானது என்று விமர்சித்துள்ள, நியூயார்க் நகர சபை, அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பலரும் பல விதமான கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் சரியான நடவடிக்கை என்றும், ஒரு சிலர் நீதிபதியாக அவரது வேலையில் எந்தவொரு குற்றத்தையும் கண்டுபிடிக்காத போது, அவர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ஏற்க முடியாது என கூறி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 516

    0

    0