விளம்பரம் பார்த்தால் பணம்; My V3 ads உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு,..
Author: Sudha20 July 2024, 8:55 am
விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, பிரபலமானது my V3 ads செயலி. இந்த my v 3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரும் எனகூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில்புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக கோவையைச் சேர்ந்த my v3 ads செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் இதன் உரிமையாளர் சக்தி ஆனந்தனை, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.இதன்படி, சக்தி ஆனந்தன், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும்சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த ஐந்தாம் தேதி சரணடைந்தார். அவரை ஜூலை 19 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவிட்டுள்ளார்.
0
0