கோயிலை இடிக்கப் போறீங்களா? போலீசாரை வறுத்தெடுத்த பொதுமக்கள்: நேரில் களம் இறங்கிய ஜட்ஜ்..!!

Author: Sudha
3 August 2024, 11:35 am

சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் ஸ்ரீ ரத்தின விநாயகா், துா்க்கை அம்மன் கோயில் உள்ளது. நூறு ஆண்டு பழமையான இந்த கோயில் அருகே, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க நிபுணா்கள் குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா், நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ‘கோயில் அமைந்துள்ள இடம், மெட்ரோ ரெயில் நுழைவு வாயில் அமைய உள்ள இடம் ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என கோரப்பட்டது.

மனுதாரா் தரப்பிலும், இதே கோரிக்கை வலியுறுத்தப்படவே,நேரில் சென்று ஆய்வு செய்வதாக நீதிபதி கே.குமரேஷ்பாபு அறிவித்தாா். அதன்படி மெட்ரோ திட்ட பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஶ்ரீ ரத்தின விநாயகர், துர்க்கையம்மன் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.விரிவான வரைபடம் கொடுத்து மெட்ரோ திட்ட பணிகளை குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.நீதிபதி கோயிலின் உள்ளே செல்லும்போது பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆய்வு அறிக்கையினை நீதிபதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார். இந்த வழக்கு வருகிற எட்டாம் தேதி விசாரணைக்கு வருகிறது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!