‘சீனியர்னா பெரிய இவனா’…சீனியரை அரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!(வீடியோ)

Author: Rajesh
1 April 2022, 3:43 pm

கோவை: குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் ஒருவரை ஜூனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் ( நேரு) கல்லூரியில் பிபிஏ துறை சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் ஜூனியர் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில், கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மாணவனை 10க்கு மேற்பட்ட ஜூனியர் மாணவர்கள் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டபோது சீனியர்ன்னா பெரிய இவனா நீ ! இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் ஜட்டி இல்லாமல் சுத்தவிடுவோம் என மிரட்டி அடித்தனர். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து குனியமுத்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்து சென்று மிரட்டல் அளிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காதல் விவகாரமா? கல்லூரியில் ரேகிங் விவகாரமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு இடையே மோதல் பொதுவெளியில் நடைபெற்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் கதையின் நாயகன் மற்றொரு நாயகனின் உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக அடித்து அனுப்பும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதே போன்று இந்த சம்பவமும் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1436

    0

    0