சைத்தானின் வப்பாட்டி பிள்ளையா சீமான்..? இப்படியொரு பைத்தியகாரன் எல்லாம் ஒரு தலைவரா..? கு.இராமகிருட்டிணன் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
3 August 2023, 6:00 pm

தனக்கு வாக்களிக்காத மக்களை சைத்தானின் பிள்ளைகள் என கூறும் சீமான் அடுத்து தொண்டர்கள் மீதும் பாய்வார் என்று தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றச்சாட்டியுள்ளார்.

தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ள சீமான், தமிழில் கூறும் ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்தால் என்ற பழமொழி போல தற்போது அரை நாள், ஒரு மணி நேரம் ஆட்சியை கொடுங்கள் என்று மக்களிடையே கெஞ்சிக் கொண்டிருந்த சீமான், தனக்கு வாக்களிக்காத எல்லோருமே சாத்தானின் பிள்ளைகள் என உலரத் தொடங்கி இருக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சைத்தானின் பிள்ளைகள் என சீமான் விரக்த்தியின் உச்சியில் பேசியிருக்கிறார். அதற்கு காரணம், தனக்கு வாக்களிக்காமல், திராவிட கழகங்களான திமுகவிற்கும். அதிமுகவிற்கும் வாக்களித்தவர் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இந்த 18 சதவிகிதத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது என்ற ஒரு புதுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

சீமான் கட்சியை துவக்கிய காலத்தில் அதிமுகவை ஆதரித்தவர். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ஊர் ஊராகச் சென்று பேசியவர் இவர். அப்போது, அண்ணா திமுகவிற்கு வாக்கு கேட்ட சீமான் யாருடைய பிள்ளை?. சைத்தானின் வப்பாட்டி பிள்ளையா? அப்படித்தான் நமக்கு நினைக்க தோன்றும். எனக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் சைத்தான் சீமான் கூறினால் திமுகவிற்கு, இந்துக்களும் தான் வாக்களிக்கிறார்கள். சீமான் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமானின் பேச்சுக்கள், உடல் அசைவுகளை பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிற தமிழக இளைஞர்களே, இப்படி ஒரு பைத்தியத்தை தலைவராக வைத்து கொண்டு, தமிழ்நாட்டை சீரழிக்க வேண்டாம். ஆனால், புரிந்து கொள்ளுங்கள் சீமானின் தம்பிகளும் புரிந்து கொள்ளுங்கள். தனக்கு வாக்களிக்காத மக்களை சைத்தானின் பிள்ளைகள் என கூறும் சீமான், அடுத்து உங்கள் மீதும் பாய்வார். எச்சரிக்கையாக இருங்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இதுவரை நடை பயணத்தில் தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு தப்பு கணக்கு போட்டு நடக்கத் துவங்கியுள்ளார். ஆனால், நடந்த தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து இடைவிடாமல் இரவு பகல் பாராமல் நடந்தார்கள். அவர்களெல்லாம் கிராமத்திற்கு சென்றாலும், கிராமத்தில் இருக்கக்கூடிய தொண்டர்களின் இல்லங்களில் தங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அண்ணாமலை ஒரு நாளைக்கு நீரழிவு நோயாளிகள் நடப்பது போல இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை தான் நடக்கிறார்.

இவர் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை, நான்கைந்து பாராளுமன்றத் தேர்தல் முடிந்து தான் முடிப்பார். இவர் இந்த நடைபயணத்தை முடிக்கின்ற பொழுது அவருக்கு வயது 90 ஆகிவிடும். “என் மண் என் மக்கள்” என்று இவர் நடக்கின்ற மண்ணைத்தான் மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இவரை தமிழகத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற மத்திய அரசு தமிழக மக்களின் மண் மற்றும் விவசாய நிலங்களை கூறு போட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு எரிவாயு திட்டம் நிலக்கரி திட்டம் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மத்திய அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி பேசாமல் என் மண் என் மக்கள் என ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் என் மக்கள் என கூறும் பிற்படுத்தப்பட்ட மக்கள் திருவாரூர் மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் 4% கூட பேராசிரியர்கள் ஆக இல்லை. இவர் கூறும் யாரும் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்களாக இல்லை. வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் என யாரும் இல்லை. ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி சமூகத்தை சார்ந்த யாரும் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இல்லை.

இந்த ஆட்சியில் 4 சதவிகிதம் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 96 சதவிகிதமும் பார்ப்பனர்கள் தான் உள்ளார்கள். இவருடைய நடைபயணத்தை அருளும் ரசிக்கவில்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரன் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு, உண்மையாக இருக்குமானால் மாநில அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நிலையில், அது ஒரு தனிமை படுத்தப்பட்ட சிறை. வேலூர் சிறையை விட அது கொடுமையான ஒன்று. எனவே, அந்த 4 பேரையும் அவர்கள் விரும்புகின்ற நாட்டிற்கோ, அல்லது பிரான்ஸ் நாட்டு அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இவர்களை அனுப்ப வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 614

    0

    0