இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது தான் உண்மையான ஜனநாயகம் எனதிராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இண்டியா கூட்டணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது.
நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் நடந்த பேரிடரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சிறிய பிரச்சனை என்றாலும் கூட, ஆயிரம் கோடியை வழங்குகிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் பக்தி மாத்திரையின் மூலமாக, தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் வரலாம் என இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார். அதனால் தான் அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்க இருக்கிறார்.
இதுவரை இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டிலும் கோவிலுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனை திறந்து யாரும் பார்த்தது இல்லை. இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும், இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தான் உண்மையான ஜனநாயகம், எனக் கூறினார்.
சேலம் பெரியார் பல்கலைகழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை குறித்து பேசிய அவர் கூறியதாவது :- ஆளுநர் எப்படி நடந்துகொள்கிறார் என மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு. அரசியல் அமைப்பு சட்டம் 162 படி ஆளுநர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே, ஒருவர் மீது அரசு வழக்கு போட்டுள்ள போது, அவர் கிட்டயே செல்ல கூடாது, துணை வேந்தர் வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, குறிப்பாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள போது, ஆளுநர் செல்கிறார். விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்.
அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் மாற்றவும், அதனை மறைப்பதற்காகவும் தான் போகிறார். அதிகாரிகள் பார்க்கும் போது ஆளுநரே அவருடன் இருக்கிறார் என அச்சப்படுவார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது, பாஜக ஆள் என்பதற்காகத்தான். பல குற்றங்களை அடுக்கடுக்காக செய்து கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி, இதிலும் தனது சுய உருவத்தை காட்டி, பாஜக அரசியலை இதிலும் நடைமுறைபடுத்துகிறார். இதன் காரணமாக தான் மாணவர்கள் இன்று அவரை எதிர்த்து மாணவர்கள் கண்டங்களை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள், தடா, பொட சட்டம் போல கொடுமையானது, மனித உரிமைகளை பறிப்பதில் முக்கியமான ஒன்று, காலணி சட்டங்களை போக்கி புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, அதை விட கொடுமையான சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிக்குமா என கேள்வி எழுந்தாலும், அதே நேரத்தில் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர், என தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.