இந்தியாவில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என்றும், அதற்கு நல்ல டாக்டர்கள் தேவை என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.
மேலும் படிக்க: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்… உங்க இஷ்டத்துக்கு தாமதிக்க முடியாது ; திமுகவை எச்சரித்த ராமதாஸ்..!!
அப்போது, பேசிய அவர், ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என்றும், அதற்கு நல்ல டாக்டர்கள் தேவை என்றும், முதல்வர் மு.க ஸ்டாலின், இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இரு டாக்டர்கள் உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் மோடி முகாம் போட்டாலும், தமிழகத்தில் வெல்ல போவது இந்தியா கூட்டணி தான் என்றும், மோடி சட்டத்தை வளைத்து வருவதாகவும், துணை சபாநாயகர் பதவியை மோடி நிரப்பாமல் ஜனநாயகத்தை படுகொலை செய்கிறார் மோடி எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், மோடி, திரிசூலம் வைத்து மிரட்டி வருமானத்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ அனுப்பி சோதனை செய்கிறார்கள் என்றும், இந்திய இளைஞர்களுக்கு வேலை கேட்டால் மத்திய அமைச்சர் முருகன் கையில் வேல் கொடுத்து உள்ளார் மோடி என்றும் கூறினார்.
மேலும் படிக்க: மோடிக்கு புத்தி கெட்டு போச்சா..? பாஜகவை வேரடி மண்ணோடு அழிக்கனும்… வைகோ ஆவேசம்…!!!
மோடி பொய் தொழிற்சாலையாக மோடி செயல்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர் மினிமம் பேலன்ஸ் வைக்காத அபராதம் மூலம் வங்கியில் இருந்து 21 ஆயிரம் கோடி சுருட்டி உள்ளார் மோடி என்றும், மோடி ஊழலை தலை மீது வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் பற்றி பேசுவதாகவும், அவருக்கு ஊழல் பற்றி பேச என்ன இருக்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, ஏப்ரல் 19ந் தேதி வாக்கு இயந்திரத்தில் பச்சை விளக்கு எரிகிறதா..? என பார்த்து வாக்களிங்க என்றும், அப்போதுதான் உங்கள் வீட்டில் அனைவரும் விளக்கு எரியும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு சந்திரன், ராஜேந்திரன், திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
This website uses cookies.