நுழைவுத்தேர்வு போன்ற கண்ணிவெடிகளில் நம் பிள்ளைகள் சிக்கும் ஆபத்து : தஞ்சையில் கி.வீரமணி பிரச்சாரம்!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 9:53 am

தஞ்சை : பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு போன்ற கண்ணிவெடிகளில் நமது பிள்ளைகள் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருப்பதாகவும், அந்த ஆபத்திலிருந்து காத்துக் கொள்வதற்கு பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளதாக கி வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களுடன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இருபத்தொரு நாள் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் இன்று இரவு தஞ்சை வந்து சேர்ந்தது.

இதையடுத்து, ஆபிரகாம் பண்டிதர் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கி. வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, 11 லட்சம் பேர் விண்ணப்பித்து 88 ஆயிரம் பேருக்கு மட்டுமே மருத்துவ கல்வி இடம் கிடைக்கிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் மருத்துவக்கல்வி கிடைக்கவில்லை.

இதனால்தான் நம் மாணவச் செல்வங்கள் உக்ரேன், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று படித்தாலும், நீட் தேர்வு அளவிற்கு செலவு செய்ய வேண்டியதில்லை. அதைவிட குறைவுதான் என மாணவர்கள் கூறுவதால் இந்தப் படிப்பு எப்படி பட்ட படிப்பு என கேள்வி எழுப்பிய கி வீரமணி, பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு என்ற கண்ணிவெடிகளில் நம் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளக் கூடிய ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்துக்களிலிருந்து விலக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பரப்புரை பயணம் மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1307

    0

    0