நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு நேற்று அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் விக்ரமாண்டி வி -சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது .பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
மாநாட்டில் பேசிய கட்சி தலைவரான விஜய் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார். குறிப்பாக அரசியல் எதிரிகளாக நான் திமுகவை தான் பார்க்கிறேன் என நேரடியாக அவர் தாக்கி பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு அரசியல் கட்சி தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.மேலும் இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக சித்தாந்த எதிரி எனவும் திமுக அரசியல் எதிரி என்றும் கூறி இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்பதை வரவேற்பதாகவும் நீட், ஆளுநர் விவகாரங்களில் விஜய்யின்
கொள்கைகளை ஏற்கவில்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இப்படியாக விஜய் யின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் மாநாட்டில் பேசிய கருத்துகளும் அவரது நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்த போது விஜய் திடீரென கேப் விட்டிருந்தார். சில நிமிடங்கள் பேசாமல் இருந்த அந்த சமயத்தில் விஜய்யின் தொண்டர்களுக்கு மத்தியில் கடவுளே அஜித்தே…. கடவுளே அஜித்தே என்ற ஒரு கரகோஷத்துடன் குரல்கள் எழுப்பினர்.
அப்போது விஜய் அதை கேட்டு கடும் கோபமாக டென்ஷனான ரியாக்ஷன் உடன் அமைதி காத்து மீண்டும் பேச தொடங்கினார். இந்த விஷயம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Gap விட்ட விஜய்… 'கடவுளே.. அஜித்தே' என கத்திய தவெக தொண்டர்கள்.!#TVK #TVKMaanaadu #TVKConference #TamilagaVettriKazhagam #TVKMaanaaduOct27 #TvkVijayMaanadu #தமிழகவெற்றிக்கழகம் #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/lAeknfucV6
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) October 28, 2024