கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது ; சத்தியமா, எங்களை நம்புங்க .. முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 3:03 pm

கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் – பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மாணவி தான் படித்து வந்த பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 5வது நாளாக மாணவியின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது.

போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் மீது நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 773

    0

    0