குரூப் 4 தேர்வு எழுதிய பசங்க மீது பொய் வழக்கு… கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து பெற்றோர்கள் கண்ணீர் மல்க மனு..!

Author: Babu Lakshmanan
10 August 2022, 4:25 pm

கள்ளக்குறிச்சி கலவரத்தில் பொய் வழக்குகளை போட்டு தங்கள் மகன்களை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி பிளஸ் டூ மாணவி மர்ம மரணம் சம்பவத்தை தொடர்ந்து, கணியாமூர் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கலவரத்திற்கு சம்பந்தமே இல்லாத குரூப் 4 தேர்வு எழுதிய மாணவர்களையும், காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரத்துடன் அவர்கள் பெற்றோர்கள் டிஜிபி அலுவலகத்தில் தங்களின் மகன்களை விடுவிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பேசியதாவது :- தங்களின் மகன்களின் எதிர்காலம் காவல்துறையின் கைது நடவடிக்கையால் கேள்விக்குறியாகி உள்ளது. தூய்மை பணியாளராக உள்ளேன். தூய்மை பணியாளரின் மகன் குரூப் 4 தேர்வு கூட எழுத கூடாதா?

தன் மகனும் பட்டம் பெற்று அரசு உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. அந்த கனவு தற்போது வீணாகி விட்டது, என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும், என் மகன் எங்கு சென்றான். அந்த நேரத்தில் எங்கிருந்தான் என்பது குறித்து தான் டிவி காட்சிகள் ஆதாரத்துடன் வைத்திருக்கிறோம். அப்படி என் மகன் தவறு செய்திருந்தால் நான் சட்டத்துக்கு தலை வணங்குகிறேன், என குடியரசு வசந்த் அவர்களின் தந்தை செல்வராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர், தேர்வு எழுதிவிட்டு வந்ததாக காண்பித்த ஹால் டிக்கெட்டையும் காவல் துறையினர் கிழித்தெறிந்துள்ளனர், என்றார்.

பின்னர் பேசிய வழக்கறிஞர், காவல் துறையினர் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும், சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட இணைத்தை சேர்ந்தவர்களை மட்டுமே காவல்துறையினர் கைது செய்ததாகவும், விரைவில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 547

    0

    0