இந்தக் கொடி, சாப்பாடு எல்லாம் நான் சம்பாரித்தது… திமிராத்தான் பேசுவேன் ; கமல்ஹாசன் தடாலடி பேச்சு..!!!
Author: Babu Lakshmanan21 February 2024, 12:55 pm
மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :- முழுநேர அரசியல்வாதி யாரும் கிடையாது. முழு அரசியல்வாதி என்பது ஏதும் இல்லை ; முழு நேர அப்பனும் இல்லை, முழுநேர மகனும் இல்லை. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல.. சோகத்தில் வந்தவன்.
இந்த ம.நீ.ம. கொடி, இங்கு வழங்கப்படும் உணவு, இந்த மேடை எல்லாம் என் சம்பாத்தியத்தில் வந்தது. நான் திமிராக பேசுகிறேன் என்று சொல்லுவார்கள். இந்த திமிர் பெரியாரிடம் இருந்து வந்தது. என்னை அரசியலில் இருந்து போக வைக்க முடியாது. நமக்கு தேசம் தான் மிக முக்கியம் ; கட்சியின் கொள்கைகளை பிறகு பார்த்துக் கொள்ளாலாம்.
விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்த 10% கூட மத்திய அரசு செய்யவில்லை. தேசத்தின் குடியுரிமை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. ஓட்டுக்காக பணம் வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை முடியும். கோவை தெற்கில் நான் தோல்வியடைய காரணம் 90,000 பேர் வாக்களிக்கவில்லை.
தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும், என்று கூறினார்.