என் பிறந்த நாள் என்பதை விட முக்கியமான நல்ல நாள்… இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை : கமல்ஹாசன் உருக்கமான பேச்சு..!!!
Author: Babu Lakshmanan7 November 2023, 12:17 pm
நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை திறந்து வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது :- நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இது என் பிறந்த நாள் என்பதை விட முக்கியமான ஒரு நல்ல நாள். இதில் அரசியல் ஆதாயம் கடந்து மனித நேயம் சம்பந்தப்பட்டது. நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல் விழா. மனிதம் சார்ந்து நான் உட்பட அமைச்சர்கள் வந்துள்ளனர்.
இந்த வாயு ஜெல் என்ற இயந்திரம் இரண்டு வருடங்களாக ராஜ் கமல் நிறுவனத்தில் 6 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இதை பயன்படுத்தலாம். முன் மாதிரியாக இதை செய்வதால், இதை பார்த்து பயன்படுத்தி அனைத்து மருத்துவமனையிலும் என்னை போன்றவர்கள் அரசுக்கு கைகோர்ப்பார்கள். இது இந்தியாவில் ஐஐடியில் செய்து உள்ளனர். இதை முன் மாதிரியாக அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.
இது போன்ற பல இடங்களில் மற்றவர்கள் செய்ய வேண்டும். கட்சி சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் உள்ளது. இதுபோன்ற இயந்திரம் உள்ளது என்று அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் முன் முயற்சியாக இதை தொடங்கி இருக்கிறோம்.
நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. எங்களுக்கு தனி கட்சி இருக்கிறது. இதில் அரசியல் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.