50 ஆயிரம் வாக்குகளை வாங்கிய கமல்ஹாசன் கோவை பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை : எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 11:49 am

கோவை காளப்பட்டி அருகே உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டல மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது, திமுக ஆட்சியாக இருந்தாலும் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தான். கோவையில் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கொடுத்துள்ளோம்.

கமல்ஹாசன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்றுக் கொண்டு இன்னும் எட்டி பார்க்கவில்லை. வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கோவைக்கு பல திட்டங்களை பேசி வருகிறார்.

தமிழக அமைச்சர்களையும் இங்கு கோவையில் காணோம். எடப்பாடியார் பிரதமர் அருகில் அமர்ந்து இருந்தார். தமிழ்நாட்டில் இன்றைய ஆளும் கட்சி கோவையை புறக்கணிக்கிறது. எடப்பாடி தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். புறக்கணித்த திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்று அவர் பேசினார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!