நம்பிக்கை வாக்கெடுப்பு; ஜாலி சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்; காஞ்சிபுரம் மேயர் வெல்வாரா?..!!

Author: Sudha
28 July 2024, 11:47 am

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.கவுன்சிலர்கள் வாக்கெடுப்பின் மூலம் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபர் பொறுப்பேற்றார்.கடந்த 2 ஆண்டுகளாக மேயர் மகாலட்சுமிக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் மோதல் இருந்து வந்தது.

இந்த மோதல் பிரச்சினையால் மேயர் மகாலட்சுமி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில், இவர்கள் கலந்து கொள்வார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் 10 பேரும் அவர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுகவில் 33 பேரும், விசிக, காங்கிரஸில் தலா ஒரு கவுன்சிலர் என ஆளுங்கட்சி தரப்பில் 35 பேர் உள்ளனர். இதில் மேயருக்கு எதிராக திமுக 17, அதிமுக 8, பாமக 2, சுயேட்சை 4, பாஜக, தமாகா என மொத்தம் 33 பேர் உள்ளனர்.எனவே நாளை நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?