கனிமொழியின் கணவருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2023, 12:19 pm

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் தொழில் நிமித்தமாக சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது. இதையடுத்து அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.இதனிடையே இந்த தகவல் அறிந்து உடனடியாக விமானம் பிடித்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார் கனிமொழி. அங்கு மருத்துவமனையில் தங்கி தனது கணவர் அரவிந்தன் உடல்நிலையை கவனித்துக்கொள்கிறார்.

மருத்துவர்கள் அளித்து வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக கனிமொழியின் கணவர் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் பூரண நலம் பெற்று அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தனது தாயார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல்நலக் குறைவு, மற்றொரு பக்கம் கணவர் அரவிந்தனுக்கு உடல் நலக் குறைவு என்பதால் கனிமொழி சற்று கலங்கி போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

இதனிடையே தனது தங்கை கனிமொழியை தினமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அரவிந்தனின் ஹெல்த் அப்டேட்ஸ் பற்றி கேட்பதோடு தைரியமும் அளித்து வருகிறாராம்.

இதனால் கனிமொழி ஓரளவு தைரியமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதனிடையே இந்த தகவல் அறிந்த கட்சியினரும், முக்கிய நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், கனிமொழியை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவரது கணவர் உடல்நலம் பற்றி விசாரிப்பதோடு ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!