கன்னியாகுமரி ; தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடம் அக்கட்சியின் எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான மனோ தங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான மகேஷ் இடையே உச்சகட்ட உட்கட்சி மோதல் நிலவி வந்தது. அதோடு, நாகர்கோவில் மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கும், மேயருக்குமான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில், நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என ஆறு மணி நேரம் ரகசிய விசாரணை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளிடம் கனிமொழி பேசியதாவது ;- யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் என தலைவர் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அன்பு கட்டளையும் அவர் விடுத்துள்ளார்.
மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவது தான் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் சிலர் நாம் வெற்றி பெற்று விடலாம் என கனவு கண்டு இருக்கிறார்கள். இங்கு மீண்டும் திமுக அல்லது திமுக கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றி பெற முடியாது என்பதற்காக நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும்.
கழக நிர்வாகிகள் கட்சியில் அதிகமானோரை இணைத்து பணியாற்ற வேண்டும். கட்சியில் அதிகப்படியான பெண்கள் நம் இயக்கத்தில் இணைத்து செயல்பட வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள் மாணவர்கள் திமுகவிலிருந்து அரசியலை தொடங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இன்று இந்தியா முழுவதும் உள்ள இயக்கங்களை இணைத்து நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பை தலைவர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். இன்றிலிருந்து நம் வேலையை தொடங்க வேண்டும்.
தேர்தல் தொடங்கிய பிறகு பணியை தொடங்கக் கூடியவர்கள். நாமல்ல கழகத்தில் உள்ளவர்களை செயல்பட தூண்ட வேண்டும். திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல வாய்ப்பு கருணாநிதி நூற்றாண்டு மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதற்கு மறைந்த தலைவர் கருணாநிதியும், திமுகவும் தான் காரணம். எதிரணியினர் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்புகிறார்கள். அதை முறியடிக்கும் வகையில் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும், என அவர் பேசினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.