எந்த திட்டம் எடுத்தாலும் கருணாநிதி பேரு தான்… அப்படியே TASMAC-க்கும் அந்த பேரை வைக்க வேண்டியது தானே..? ராம ரவிக்குமார் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan15 July 2023, 5:00 pm
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள ரவுண்டானாவில் 27 அடி உயரத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ன கோரிக்கையை வலியுறுத்தினார்.
கல்வி கண் திறந்த காமராஜரின் 121 வது பிறந்த நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், சமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், இந்து தமிழர் கட்சி சார்பில் மாநிலத் தலைவர்.ராம ரவிக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக அரசானது அரசு சார்பில் கட்டப்படுகின்ற கட்டிடங்களுக்கும், திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் சூட்டுகிறது. அதே போன்று தமிழகத்தில் தற்போது மினி மது பாட்டிலும் இறக்கப் போகிறார்கள். இது கண்டனத்திற்குரியது. டாஸ்மாக்குக்கும் கலைஞர் பெயர் சூட்ட வேண்டியது தானே..?
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் கல்வி கண் திறந்த காமராஜருக்கு 27 அடி உயரத்தில் அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும், என கோரிக்கை எடுத்துள்ளார்.