கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகேபக்கத்துவீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உடலை சிதைத்த பொறியியல் பட்டதாரி நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான கமலதாஸ் என்பவரது மனைவி லைலா (47). இவரது அடுத்த வீட்டில் வசிப்பவர் பொறியியல் பட்டதாரியான எட்வின். இவர் ஏற்கனவே லைலாவிற்கு பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதுகுறித்து லைலா எட்வினின் தாய் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் முறையிட்டு எட்வினை அவர்கள் கண்டித்தனர். இதனால் எட்வின் லைலாவின் மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி லைலா உறவினர் ஒருவரின் புதுமனைபுகுவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தனிமையில் படுத்திருக்கும்போது, எட்வின் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து லைலாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு லைலா கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லைலாவை சரமாரியாக தாக்கி கழுத்தை மிதித்துள்ளார்.
இதில், மயக்கமடைந்த லைலாவை பாலியல் பலாத்காரம் செய்த எட்வின், லைலா படுகாயங்களுடன் இருப்பதாக உறுவினர்கள் தெரிவித்ததை, தனக்கு தெரியாதவன் போல் நடித்து உறுவினர்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் உறுவினருடன் சென்றுள்ளார்.
தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தை நடத்தியது எட்வின்தான் செய்துள்ளார் என தெரியவந்ததையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற லைலா நாகர்கோவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.