அயர்ன் மேன் போட்டியில் கலக்கவிருக்கும் நம்ம ஊர் ஹீரோ: ஸ்பெயின் செல்ல தயாரா…!??

Author: Sudha
5 August 2024, 6:35 pm

உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் ‘ஸ்ட்ராங் மேன்’ போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்களது உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணன் என்ற M.A பட்டதாரி ஒருவர் இந்தியாவின் இரும்பு மனிதனாக வலம் வருகிறார்.

இந்நிலையில், முதல் முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இவர், 85 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

அதுவரை தமிழகத்தின் இரும்பு மனிதன் என பெயர் எடுத்த கண்ணன், இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற பெயரினைப் பெற்றார். இதன் மூலம் உலக அளவில் நடைபெறும் இரும்பு மனிதன் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ள தேர்வானார்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி, வரும் அக்டோபர் மாதம் 13,14,15 ஆகிய தேதிகளில் ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகிறது. இந்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.நிச்சயம் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்” எனவும் தமிழக அரசு என்னை ஊக்குவித்தால் ஓவ்வொரு மாவட்டத்திலும் என்னை போன்ற 100 இரும்பு மனிதர்களை உருவாக்குவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!