சத்தியமா சொல்ற.. கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது : அடித்து சொல்லும் அமைச்சர் துரைமுருகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 9:00 pm

சத்தியமா சொல்ற.. கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது : அடித்து சொல்லும் அமைச்சர் துரைமுருகன்!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடகா அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது.

கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம் அதுதான் நியதி என்று திட்டவட்டமாக கூறினார்.

  • Ajith wishes on Phone to Vijay விஜய்க்கு வாழ்த்து கூறிய அஜித்? என்ன வார்த்தை சொல்லிருக்காருனு பாருங்க..!!