‘அவன் அவ்வளவு Worth இல்லை’… கர்நாடகா தேர்தல் ரிசல்ட் ; அண்ணாமலையை ஒருமையில் திட்டிய காயத்ரி ரகுராம்..!!
Author: Babu Lakshmanan13 May 2023, 2:01 pm
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் ஒருமையில் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
130க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போகிறது. இதனை கர்நாடகா, தமிழகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இந்த சூழலில், கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, பிரபல நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் காலை முதலே அடுக்கடுக்கான டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதில் கூறியிருப்பதாவது:- கர்நாடகா ரிசல்ட் மெதுவாக வருகிறது. இப்போ தேர்தலுக்கு விளம்பரம் ஹெலிகாப்டர் வரவேற்புக்காக மலர்கள் குவிந்த கூட்டம் அதிக செலவு செய்த பிறகு எல்லாம் வீணாகிவிட்டது. மேனேஜர் அதைச் சரியாகச் செலவழித்தாரா அல்லது தனக்காக எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. இப்போ எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நட்சத்திர பிரச்சாரகர், பெருமைமிக்க கனடிகா வளர்ப்பு மகன் மலிவான அரசியல்வாதி தனது மலிவான அரசியலுக்காக மக்களால் தூக்கி எறியப்படுவார். அரசியலில் இருந்து மட்டுமல்ல, (தென் இந்தியா) திராவிடத்தில் இருந்தும் தூக்கி எறியப்படுவார், என தெரிவித்துள்ளார்.
அதோடு, கர்நாடகாவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவுக்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக பரப்பப்பட்டு வரும் தகவலை பகிர்ந்த காயத்ரி ரகுராம், ‘அவன் அவ்வளவு Worth இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்க்கும் பாஜகவினர் அவரை கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேவேளையில், இந்த டுவிட்டுக்கு ஆதரவாகவும் பதிவுகள் குவிந்து வருகின்றன.
0
0