ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகா கறார்.. அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரிப்ளை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 2:04 pm

ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடகா கறார்.. அமைச்சர் துரைமுருகன் கொடுத்த ரிப்ளை!!

அண்மையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனை குறிப்பிட்டு, தமிழகத்தில் காங்கிரஸுக்கு நெருக்கமான திமுக ஆட்சி செய்து வருகிறது. அதனால் கர்நாடக அரசு காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது என பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் இதனை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் முற்றிலும் மறுத்துள்ளார். இங்கு பெங்களூரு மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவே நாங்கள் தண்ணீரை திறந்து விட்டோம் என விளக்கம் அளித்தார்.

அடுத்து, இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதல்வர், தமிழக்த்தில் இருந்து கூட யாரும் தண்ணீர் கேட்கவில்லை. பிறகு எப்படி நாங்கள் தண்ணீர் திறப்போம். தற்போது எங்களிடமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது தமிழக அரசு கேட்டாலும் சரி, மத்திய அரசு உத்தரவிட்டாலும் சரி நாங்கள் தமிழகத்திற்கு தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா.

இதனிடையே வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட மாட்டோம்’ என கர்நாடகா சொல்லியிருக்கிறதே?’’ என்று கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்தவர், ‘‘என்னைக்காவது, அங்க இருக்கிற மந்திரிகளில் யாராவது ‘நாங்க தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுறோம்’ என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. எப்ப பார்த்தாலும், இதைத்தான சொல்லிக்கிட்டிருக்கிறாங்க. நாமலும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் போய்தானே ஆணை பெற்று தண்ணீரை பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகையால, எப்படி பெறுவது என்று எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.

  • veera dheera sooran stars chiyaann vikram and dushara vijayan joined in jallikattu function வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…