கார்த்தினு சொன்னா தெரியுமா? கார்த்தி சிதம்பரம்னு சொன்னாதான் தெரியும் : சிவகங்கை பாஜக வேட்பாளரின் நூதன பிரச்சாரம்!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2024, 10:44 am
கார்த்தினு சொன்னா தெரியுமா? கார்த்தி சிதம்பரம்னு சொன்னாதான் தெரியும் : சிவகங்கை பாஜக வேட்பாளரின் நூதன பிரச்சாரம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியானது சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டு பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.
இன்று ஆலங்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜகவின் கூட்டணியில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் தேவநாதன் யாதவ் பேசியதாவது, தேவநாதன் என்பவர் சிவகங்கைக்குப் புதியவர் என்று கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்திருக்கிறார். நான் சிவகங்கைக்குப் புதியவன் என்றால் ஏன் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், என்னை புதியவர், வெளியூர் காரர் என்று விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம் எத்தனை முறை தொகுதிக்கு வந்தீர்கள் என்று தெரியாது உங்களை விட சிவகங்கைத் தொகுதியில் அதிகம் பயணம் செய்தவன் நான்.
எனது தேசிய மக்கள் கல்விக் கழகத்தில் இருந்து 2011ல் வேட்பாளர்களை நிறுத்தி சிவகங்கை, காரைக்குடி, திருமயம் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் பெற்றேன். தற்போது நீங்கள் நின்று வென்று காட்டுங்கள்,அவ்வளவு வேண்டாம்.
கார்த்திக் என்றால் அவரை இங்கு யாருக்காவது தெரியுமா? கார்த்தி சிதம்பரம் என்றால் தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் என்னை தேவநாதன் என்றாலே அனைவருக்கும் தெரியும் என்றார்.