கருணாநிதிக்கு வரலாறு எதுவும் இல்லாததால், மத்திய அமைச்சரை வரவழைத்து நாணயம் வெளியிட்டு பெயர் தேடிக் கொண்டனர்
தலைவாசலில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், மாநில செயலாளர் பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தலைவாசல் அருகே, சிறுவாச்சூரில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
இதில், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு 12 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தலைவாசல் ரயில்வே ஸ்டேஷனில் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்துவதற்கு, மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். கருணாநிதிக்கு வரலாறு எதுவும் இல்லை; அவரது குடும்பத்தினருக்கு நல்லது செய்தார். தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டால் பெயர் கிடைக்கும் என்று, தி.மு.க., அழைத்துள்ளது.
கழுத்தில் நகை இருந்ததை பார்த்து கண் உறுத்தியதால், நகையை அடமானம் வைக்கும்படி அமைச்சர் உதயநிதி கூறியதால், நகை அடமானம் வைத்து, மக்கள் ஏமாற்றமடைந்தனர். பா.ஜ., ஓட்டுக்கு பணம் இல்லை; நலத்திட்டம் மட்டுமே கொடுப்போம். ரேஷன் கடையில் பொருள் வழங்குவது மத்திய அரசு தான். ஆனால், கருணாநிதி, ஸ்டாலின் படம் வைத்துக் கொள்கின்றனர். மத்திய அரசு பணம் வழங்கவில்லை என்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மத்திய அரசு தான் நிதி வழங்கும்போது, தி.மு.க.,வுக்கு எதற்கு ஓட்டு போட வேண்டும்.
ஊரக வேலை திட்டத்தில், தொழிலாளருக்கு, தற்போது தலா, 250 ரூபாய் என, மொத்தம் 4,200 ரூபாய் வழங்கப்படுகிறது. விரைவில், 320 ரூபாய் வழங்கப்படும். 1,000 ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகைக்கு, ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகின்றனர். மத்திய அரசு, அதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டுவதில்லை.
தி.மு.க., என்ற திருட்டு பூசாரியை ஆட்சியில் அமரவைத்துள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தான், தமிழகம் வளர்ச்சி பெறும். தமிழகத்தில், 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்து வருகிறது.
தி.மு.க., ஆட்சியில் ஊருக்கு ஊர் ‘டாஸ்மாக்’ திறந்தது தான் சாதனையாக உள்ளது. கள்ளக்குறிச்சியில், விஷ சாராயம் குடித்து இறந்த 65 பேரில், ஆறு பெண்கள் இறந்துள்ளனர். பார்வை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகியுள்ளது. தமிழக மக்களை குடிக்க வைத்து, ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. ‘டாஸ்மாக்’ கடையிலும் தான் சாராயம் தான்; கள்ளச்சராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். ராணுவத்தில் சென்று இறந்தால் காசு இல்லை.
‘டாஸ்மாக்’ மது அருந்தும் நபர்களுக்கு, தற்போது மன நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆண்டுக்கு, 55 ஆயிரம் கோடி வருவாய்க்காக, ‘டாஸ்மாக்’கில் மது விற்று, அடுத்த தலைமுறையை திராவிட மாடல் அழித்து வருகிறது. தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு, அடுத்த தலைமுறைக்கு வைக்கும் சூனியமாகும்.
தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் கண்டு பயத்தில் உள்ளனர். பா.ஜ., இல்லை எனில் தமிழக மக்களை தின்றுவிட்டு போவார்கள். மூன்று ஆண்டில், பா.ஜ., மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டுள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்தால், நகை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் என, லோக்சபா தேர்தலில், தி.மு.க., பொய் பிரசாரம் செய்தனர். தற்போது, நகை விலை 6,000 ரூபாய் குறைந்துள்ளது.
‘முத்ரா’ திட்டத்தில், தமிழகத்தில் 2 கோடி பேர் கடன் வாங்கியுள்ளனர். பா.ஜ.,வில் மட்டும் தான், அனைத்து பொறுப்புகளுக்கும் வரமுடியும். தி.மு.க.,வில் துணை முதல்வர் யார் என்று, அவர்களே பேச வைக்கின்றனர். முதல்வரோ, பழம் பழுக்கவில்லை என்கிறார். விலைவாசி உயர்வில் மக்கள் அவதிப்படும் நிலையில், மகனை துணை முதல்வராக்க வேண்டும் என்று பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.