பேனா நினைவுச் சின்னம் விவகாரம்… கருத்துக் கேட்பு கூட்டம் குறித்த அறிக்கை வெளியீடு… யார் யார் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 February 2023, 9:32 pm

சென்னை : பேனா நினைவுச் சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவான விபரங்கள் குறித்த அறிக்கையை பொதுப்பணித்து வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

கடந்த ஜனவரி 31ம் தேதி இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பு (minutes of meeting) மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளது. இதில், 34 பேரின் கருத்துகள் இடம் பெற்றுள்ளது.

இதன் விவரம்:

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கல்யாணராமன் – ஆதரவு
சட்டப் பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம் – எதிர்ப்பு
ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சங்கர் – எதிர்ப்பு
நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் – ஆதரவு
திருவல்லிக்கேணி வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி – ஆதரவு
பாஜக மீனவர் பிரிவைச் சேர்ந்த நீலாங்கரை முனுசாமி – எதிர்ப்பு
மீனவர் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தனசேகர் – ஆதரவு
தேசிய பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி – எதிர்ப்பு
ராயபுரத்தைச் சேர்ந்த இளங்கோ – ஆதரவு
நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த செம்மலர் சேகர் – எதிர்ப்பு
அகில இந்திய பராம்பரிய மீனவர் சங்க நிர்வாகி மகேஷ் – ஆதரவு
மே 17 இயக்க திருமுருகன் காந்தி – எதிர்ப்பு
பெசன்ட் நகர் பாபு – எதிர்ப்பு
பழவேற்காட்டைச் சேர்ந்த சகாயராஜ் – ஆதரவு
சமூக செயல்பாட்டாளர் முகிலன் – எதிர்ப்பு
அகில இந்திய மக்கள் கட்சியைச் சேர்ந்த அண்ணாத்துரை – எதிர்ப்பு
காசிமேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோ – ஆதரவு
மீனவர் அமைப்பைச் சேர்ந்த காசிமேடு நாஞ்சில் ரவி – ஆதரவு
மீனவர் மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த சங்கர் – எதிர்ப்பு
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – எதிர்ப்பு
நொச்சிக் குப்பத்தை சேர்ந்த தம்பிதுரை – ஆதரவு
தமிழ்நாடு மீனவர் பேரவையைச் சேர்ந்த பார்த்திபன் – ஆதரவு
திருவெற்றியூரைச் சேர்ந்த பிரகாஷ் – ஆதரவு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மனிமாறன் – ஆதரவு
விருதுநகரைச் சேர்ந்த மீனா – எதிர்ப்பு
பொன்னேரியைச் சேர்ந்த மகிமை ராஜ் – ஆதரவு
விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி – ஆதரவு
எண்ணூரைச் சேர்ந்த நவகுமார் – ஆதரவு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரமசிவம் – ஆதரவு
மதுரையைச் சேர்ந்த பசும் பொன் பாண்டியன் – ஆதரவு
பாலவாக்கத்தைச் சேர்ந்த விஜயபாலன் – ஆதரவு
மீனவர் கிராம சபைச் சேர்ந்த ரூபேஷ் குமார் – ஆதரவு
திருவெற்றியூரைச் சேர்ந்த குமரேசன் – ஆதரவு
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் – எதிர்ப்பு

இதன்மூலம் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், பேனா சிலையை உடைப்பேன் எனக் கூறிய சீமானின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கருத்துக் கேட்பு கூட்ட அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசிடம் சமர்பிக்க உள்ளது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 509

    0

    0