ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கருணாநிதி ஆதரவு.. ஆனால் மகனோ? ஐயோ பாவம் : அண்ணாமலை அட்டாக்!!
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் செவ்வாய்க்கிழமை தனது நடைப்பயண நிறைவில் அவா் பேசியது:
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். மக்கள் பிரச்னைகள் குறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. திருப்பூா், பல்லடம் பகுதியில் வீட்டின் வாசலில் இருந்து மது குடிக்காதீா்கள் என கூறியதால் 4 பேரை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அது போல் திருநெல்வேலியில் பாஜக தொண்டா் கொலை செய்யப்பட்டுள்ளாா். இப்படி சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் குடிநீா் கிடைப்பதில்லை. இளைஞா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், மதுவும், கஞ்சாவும் எங்கும் கிடைக்கிறது.
தமிழக அரசு ஊழல் அரசாக உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் சமையல் எரிவாயு விலையில் 100 ரூபாய் மானியம் குறைப்பதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றவில்லை. ஆனால், பாஜக அரசு எந்தவித வாக்குறுதியும் கொடுக்காமல் ரூ.200 மானியம் வழங்கியுள்ளது.
திமுக தோ்தல் அறிக்கையில் செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக கேரள அரசிடம் பேசி தீா்வு காணப்படும் என கூறப்பட்டிருந்தது.ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்கள் பிரச்னைகள், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து திமுக கவலைப்படாது. பிரச்னைகள் மூலம் அரசியல் செய்யத்தான் திமுக முயலும்.
ஒரே நாடு, ஒரே தோ்தல் வந்தால் எல்லா பணிகளும் விரைவாக நடைபெறும். எனவேதான், ஒரே நாடு ஒரே தோ்தலை நடத்த பிரதமா் மோடி வலியுறுத்தி வருகிறாா். ஆனால், தமிழக முதல்வா் ஸ்டாலின் அதை எதிா்க்கிறாா். ஆனால், அவரது தந்தை கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில்(பக்கம் 271), இந்த நாடு பல தோ்தல்களால் நலிந்து கொண்டிருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமென்றால் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தால்தான் ஏழைகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எழுதியுள்ளாா்.
பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் உறுதியாக இருக்கும். ஆனால் திமுகவின் நிலைப்பாடு நேரத்திற்கு தகுந்தவாறு மாறும்.
கடையநல்லூா் நகா்மன்ற அரங்கிலிருந்து பிரதமரின் படம் அகற்றப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் மிக பெரும் வெற்றி பெற்று அதே அரங்கில் பிரதமரின் படத்தை இடம் பெற செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. யாா் படத்தை அகற்றினாா்களோ, அவா்களை அந்த படத்தை வைக்க கூடிய நிலையை உருவாக்குவோம் என்றாா் அவா்.
இதில், தென்காசி மக்களவை தொகுதி நடைப்பயண பொறுப்பாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.