ஆட்சியர் அலுவலகத்தில் பழுதான லிப்ட்டில் சிக்கிய பொதுமக்கள்… மூதாட்டி மயக்கம் ; அரசு விழாவில் பங்கேற்க வந்த போது அதிர்ச்சி!
Author: Babu Lakshmanan20 August 2022, 1:27 pm
கரூர் : கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பாதுகாப்பு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்தவர்கள் லிப்ட்டில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் சார்பில் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் இருவரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் பயனாளிகள் தங்களின் இல்லங்களுக்கு செல்லத் துவங்கினர்.
நிகழ்ச்சியானது மூன்றாம் தளத்தில் நடைபெற்றது. மூன்றாம் தளத்திலிருந்து தரை தளத்திற்கு வருவதற்காக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிஃப்ட்டை பயன்படுத்தி கீழே வர துவங்கினர்.
லிஃப்ட்டை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் தரை தளத்திற்கு வந்த லிஃப்ட்டின் கதவு திறக்காமல் அப்படியே நின்று விட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என எட்டுக்கு மேற்பட்டோர் உள்ளேயே மாட்டிக் கொண்டு தவித்தனர்.
மேலும் ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இதுபோல சம்பவம் நடந்தது கரூர் மாவட்டம் மக்களிடையே அதிர்ச்சி உள்ளாக்கியது.
மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதல் தளத்தில் அமர்ந்திருந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கீழே இறங்கி வந்து பார்க்காமல் மேலேயே அமர்ந்திருந்தது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உள்ளாகியது.