பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தும் பாஜக, இதை பற்றி பேசலாமா? கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 8:58 pm

ராகுல்காந்தி நண்பரின் திருமண விருந்தில் கலந்துகொள்வதை விமர்சிப்பதை விட அவலம் வேறில்லை என ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நேபாளத்தில் க்ளப் ஒன்றில் பார்ட்டியில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக உலா வருகிறது.

ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்றை பாஜகவினர் வெளியிட்டதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பாஜக மூத்த தலைவர்கள் அமித் மாள்வியா உள்ளிட்டோர் இந்த வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேபாளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளார் என்றும் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை எனவும் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கமளித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்க்கும்,காஷ்மீரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு ஆதரவாக தேசியக்கொடியேந்தி ஊர்வலம் போகும் பாஜக, ராகுல்காந்தி நண்பரின் திருமண விருந்தில் கலந்துகொள்வதை விமர்சிப்பதை விட அவலம் வேறில்லை. உங்களைப்போல மூடி மறைக்கவேண்டிய எதையும் நாங்கள் செய்வதில்லை!’ என பதிவிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ