அட இதுலயுமா..? அதிமுக ஆட்சியில் நட்ட மரங்களை அகற்ற முயன்ற கரூர் மாநகராட்சி ஊழியர்கள்… தட்டிக்கேட்ட அதிமுகவினரை ஒருமையில் திட்டிய அதிகாரி…!!

Author: Babu Lakshmanan
16 June 2022, 6:33 pm

கரூர் : அதிமுக ஆட்சியில் நடவு செய்த மரங்களை அகற்ற முயன்றதை தட்டிக் கேட்ட முன்னாள் அதிமுக கவுன்சிலரை கரூர் மாநகராட்சி ஊழியர்கள் ஒருமையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆன நிலையில், முன்னாள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்தும், பெயர் மாற்றம் செய்யப்பட்டும் வருகிறது.

Senthil Balaji - updatenews360

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாநகரில் மக்களுக்கு நிழல் கொடுக்கும் விதமாக, ‘கானாகத்திற்குள் கரூர்’ என்கின்ற திட்டத்தினை கொண்டு வந்தார்.

தற்போது, கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்பட்டு, திமுக ஆட்சியில் இன்றும் கூட, எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில், கரூர் – கோவை சாலை 80 அடி சாலையின் அருகே இருந்த மரங்களை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முற்பட்டுள்ளனர். அப்போது, மரங்களுக்கு முன்னர் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த கம்பி வேலிகளை அப்புறப்படுத்திய நிலையில், முன்னாள் கவுன்சிலரும், தற்போதைய மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் அதனை தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது, மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மதி என்பவரும், துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் அதிமுக பிரமுகர்களை ஒருமையில் பேசியதோடு, கை நீட்டி மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களும், அதிமுகவினரும் அதிகளவில் திரண்டதையடுத்து, அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்கள் நழுவியுள்ளனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முந்தைய ஆட்சியினர் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளிலும் காட்டலாமா..? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

CM Stalin - Updatenews360

அதேவேளையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கரூரில் நட்ட மரங்களை பிடுங்கும் திமுக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்று தனி அணி அமைத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 773

    1

    0