நள்ளிரவு வரை தொடர்ந்த நில மோசடி கேஸ்.. இரவோடு இரவாக வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீன்..!!
Author: Sudha31 July 2024, 10:04 am
கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த காட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள சுமார் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து ஏமாற்றி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவாக இருந்த அவரை கடந்த 16ம் தேதி கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.பின்னர் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது
இந்த சூழலில் விஜயபாஸ்கர் சார்பில் ஜாமீன் குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்றும், இன்று நள்ளிரவும் நடைபெற்றது.
இறுதியில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். காலை, மாலை என இருவேளைகளிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மதியம் வாங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை இது தொடர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு விஜயபாஸ்கருக்கு ஜாமீன். வழங்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.