திமுக வேட்பாளரை மாற்றக்கோரி சொந்தக் கட்சியினரே போராட்டம் : கரூர் திமுகவில் கோஷ்டி பூசல்… புலம்பும் மேலிடத் தலைவர்கள்..!!

Author: Babu Lakshmanan
1 February 2022, 4:22 pm

கரூர் : கரூர் மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளரை மாற்ற கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரளவுக்கு இறுதி செய்து விட்டன. இதையடுத்து, வேட்பாளர் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திமுகவின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், சேலம் மாநகராட்சியின் 9வது டிவிஷன் திமுக வேட்பாளராக தெய்வலிங்கம் அறிவிக்கப்பட்டார். இது அப்பகுதி திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திமுக வேட்பாளர் தெய்வலிங்கத்தை அறிவித்துள்ள நிலையில் கேபிள் மோகன் என்பவரை அறிவிக்கக் கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பொன்னம்மாபேட்டை வலசையூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர் அறிவித்த உடனே திமுகவின் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், கரூர் திமுகவில் கோஷ்டி இருப்பது அம்பலமாகியுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்குமா..? என்று மேலிடத் தலைவர்கள் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!