காங்., எம்பி ஜோதிமணிக்கு கரூர் திமுகவினர் கடும் எதிர்ப்பு… திமுக மேலிடத்துக்கு பறந்த கோரிக்கை… காங்கிரசுக்கு நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 1:04 pm

கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கரூர் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும், பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை நடத்தியது.

அப்போது, இந்த முறை காங்கிரசுக்கு கரூர் தொகுதியை வழங்கக் கூடாது என்றும், திமுக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததாக திமுக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.

கடைசியாக, யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்தாலும், ஒற்றுமையாக பணியாற்றி இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவுரை வழங்கியது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 322

    0

    0