கரூரில் போடாத சாலைக்கு ரூ.3 கோடி…பூதாகரமாகும் நெடுஞ்சாலைத்துறை முறைகேடு: மேலும் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…அடுத்தது யார்?

Author: Rajesh
13 April 2022, 6:51 pm

கரூர்: போடாத சாலையை போட்டதாக கூறி ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடி தந்த விவகாரத்தில் இன்று மேலும் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், கரூர் மாவட்டத்தில் சாலைப்பணிகள் மேற்கொள்ள வரப்பெற்ற ரூ.170 கோடி நிதியில் அமைச்சருக்கு நெருக்கமான எம்.சி.எஸ்.சங்கருக்கு மட்டும் ரூ.140 கோடிக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் புகாராகும்.

Karur District : போடாத ரோட்டுக்கு ரூ. 3 கோடிக்கு பில் போட்ட திமுக  ஒப்பந்ததாரர்.. ஆதாரங்களை அடுக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் |  ADMK M R ...

கரூர், ஈசநத்தம் சாலையில் உள்ள வால்காட்டுப்புதூர், வாங்கல் சாலையில் உள்ள என்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் சாலையில் புதிய சாலை அமைத்ததாக கூறி மோசடி நடந்துள்ளது என அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மோசடி நடந்துள்ளதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட வருவாய் அலுலவரிடம் புகார் மனு அளித்தார்.

நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் ரூ.3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.

திமுக செந்தில் பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு.. வீட்டில் குவிந்த  ஆதரவாளர்கள் | Chennai police interrogates in Senthil Balaji's house - Tamil  Oneindia

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரும், ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த், கரூர் மாவட்டத்தில் 170 கோடி ரூபாய் மதிப்பிற்கு சாலை பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த புகார் சர்ச்சையை கிளப்பிய சூழலில், கடந்த 8ம் தேதி அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஒப்பந்ததாரரின் டிப்பர் லாரிக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் மீது 7 பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் 4 முறையும், தலைமைச் செயலாளரிடமும் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்திருந்தார். ஆளுநருக்கும் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார். உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை, திருப்பூர் மண்டல பொறியாளர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆளுநரிடம் முறையிடுவதை தவிர வேறு வழி இல்லை…கரூரில் தொடரும் முறைகேடுகள்:  முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!! – Update News 360 | Tamil News  Online ...

நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலைகள் கோட்ட பொறியாளர் நித்திலன், உதவி கோட்ட பொறியாளர் முகமது ரஃபிக், கோட்ட கணக்கர் சத்யா, உதவி பொறியாளர்கள் தீபிகா, கார்த்திக்கை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டத் தில் நகர்புற உள்ளாட்சி, கிராமப்புற உள்ளாட்சி என எந்த ஒரு சாலைப்பணிகள் நடந்தாலும் எம்.சி.எஸ்.சங்கர் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்கிறார். அவருக்கு உடனே பில் பாஸ் ஆகிவிடுகிறது. மேலும் அவர்தான் அமைச்சர் போல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில் இந்த புகார் தொடர்பாக 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 1491

    0

    0