கரூர் அருகே கட்டிய வீட்டினை 10 பேர் கொண்ட இரும்பு சுத்தியல் கொண்டு உடைத்தெறிந்து நிலத்தினை அபகரித்த திமுக கவுன்சிலரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவருடைய இரு மனைவிகளில் முதல் மனைவிக்கு இரண்டு மகன்ளும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சேகருக்கு சொந்தமான நிலம் பசுபதிபாளையம் 1100 சதுர அடி வீட்டு மனை உள்ள நிலையில், மூன்று வருடத்திற்கு முன்பு, முன் பின் அறிமுகமில்லாதவர் நிலம் என்னுடையது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சேகரின் இரண்டாவது மனைவி ஜோதி என்பவர் பத்திரம் எங்களது கணவருடையது என்று ஆதரப்பூர்வமாக காட்டியுள்ளார். உடனே அந்த முன்பின் அறிமுகமில்லாதவர் அந்த பத்திரத்தினை அபேஷ் செய்து காரில் தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில், அந்த பத்திரத்தின் நகலையும், வில்லங்கத்தினையும் கொண்டு சென்று காவல்நிலையத்திற்கும், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் சென்று புகார் அளித்துள்ளனர்.
அதில், அந்த பத்திரம் அடகு வைக்கப்பட்டதாகவும், சேகரின் முதல் மனைவியின் மகன்கள் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், அந்த மூத்த தார மனைவியின் மகன்களே அந்த பத்திரத்தினை திருப்பி தருவதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து சேகரின் இரண்டாவது மனைவி மற்றும் மகன்கள் ஆகியோரும் அந்த இடத்தில் ஹலோ பிளாக்கல் மூலம் வீடு கட்டியுள்ளனர். ஏற்கனவே குடிசை வீட்டில் குடியிருந்த அவர்கள், ஹலோ பிளாக் மூலம் கட்டிய நிலையில், சிலர் கையில் சுத்தியலுடன் வந்து, அந்த வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் வீட்டை இடிப்பதை நிறுத்தவில்லை. வீட்டை இடித்ததற்கு பின்னணியில் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்திதான் காரணம் என்றும், அவருக்கு சொந்தமான இடம் எனக் கூறி 10க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்து வீட்டை சின்னாபின்னாமாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் நீதி கேட்கின்றனர்.
குண்டர்களை வைத்து திமுக கவுன்சிலர் வீட்டினை இடித்து தள்ளிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுமட்டுமில்லாமல், 5 நபர்களுக்கு சொந்தமான இந்த இடத்தினை ஒரே ஒரு திமுக கவுன்சிலர் வாங்கியதாக கூறி, அந்த நிலத்தினை, அடியாட்கள் கொண்டு, அதுவும் கட்டிய வீட்டினை இடித்த திமுக குண்டர்களின் அட்டகாசம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.