ஒரு கோடி கொசு… ஒரு லட்சம் கரப்பான்… 10 ஆயிரம் எலிகளை ஒழிப்பதே நோக்கம் : கரூரை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்…!!

Author: Babu Lakshmanan
2 February 2022, 1:06 pm

கொசு ஒழிப்பு திட்டம், எலிகள் ஒழிப்பு திட்டத்துடன் கரூர் மாநகராட்சி தேர்தல்லி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கலக்கி வருகிறார்.

கரூர் மாநகராட்சித் தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை முதல் வார்டு வாரியாக நடைபெற்று வரும் நிலையில், 26 வது வார்டு பகுதிக்கு சுயேட்சையாக போட்டியிடும் சு.ராஜேஸ்கண்ணன் என்பவர் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். கரூர் மாநகராட்சித் தேர்தலில், முதன்முதலில் வேட்புமனுத்தாக்கல் செய்தவரும் இவர்தான் முதன்முதலில் பிரச்சாரம் செய்து வருபவரும் இவர்தான்.

இவர் போட்டியிடும் 26வது பொது வார்டுக்கு உட்பட்ட, காமராஜபுரம், காமராஜபுரம் மேற்கு, கேவிபி நகர், கணேசா நகர், விஜய் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று எலி பெட்டியில், எலி ஒன்றினை பிடித்து அதை வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.

திட்டம் 1ல், ஒழிப்பு திட்டமாக, ஒரு கோடி கொசுக்கள், ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள், பத்தாயிரம் எலிகள், 100 தெரு நாய்கள் இவைகளை ஒழித்து, சுகாதாரமான நிலை ஏற்படுத்துவேன் என்று துண்டு பிரசுரமும் மக்களிடையே கொடுத்து வருகின்றார். கட்சி பேதமில்லாமல் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று வாசகங்கள் பொருந்திய துண்டுப் பிரசுரம் மனதைக் கவர்கின்றன.

மேலும், அவருடைய மகன்களுடன் காலையிலேயே வாக்கு சேகரிப்பில் தீவிரமாக களமிறங்கி வரும் சுயேட்சை வேட்பாளர் ராஜேஸ்கண்ணன், கடந்த சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்து கரூர் தொகுதியில் குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிட்ட வரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாநகராட்சியில் கொசுக்கள், எலி மற்றும் கரப்பான் பூச்சிகள் ஆகியவை அதிகரித்துள்ளது. அப்போதைய நகராட்சி தற்போதைய மாநகராட்சி நிர்வாகமும் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்லி வருகின்றார் சுயேட்சை வேட்பாளர் ராஜேஸ் கண்ணன்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…