ரெய்டுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் ; கரூரில் மேலும் 4 திமுகவினர் கைது…
Author: Babu Lakshmanan30 May 2023, 12:53 pm
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் மேலும் 4 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த 26ம் தேதி கரூர் மற்றும் ராயனூர் பகுதிகளில் சோதனைகளைச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தனர். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 28ம் தேதி மாநகராட்சி கவுன்சிலர் இரண்டு பேர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே, திமுகவைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று ராயனூர் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் திமுக ஐ.டி விங் துணை அமைப்பாளர் விக்னேஷ், மத்திய கிழக்கு விவசாய அணி அமைப்பாளர் கிருஷ்ணன், கனகராஜன், சதீஷ்குமார் ஆகிய நான்கு திமுகவினரை தாந்தோணிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.