விடிய விடிய நடந்த ரெய்டு… அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இன்றும் சோதனை நடத்த திட்டம்..!!
Author: Babu Lakshmanan27 May 2023, 8:37 am
கரூர் ; மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்று காலை 7:00 மணி முதல் வருமான வரித்துறையினார் சோதனை நடத்துவதற்காக கரூரின் பல்வேறு பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்றனர். கரூர் நகர பகுதி கோவை சாலை ராயனூர், மண்மங்கலம், காந்திகிராமம் போன்ற பல பகுதிகளில் சோதனை இடுவதற்காக வருமான வரித்துறையினர் சென்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனைக்காக வருமான வரித்துறையினர் வந்தனர். இந்த தகவல் கேள்விப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து,சோதனை நடத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அலுவலர்கள் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், வருமான வரித்துறை அலுவலர் காயத்ரி, திமுக நிர்வாகிகளால் சிறை பிடிக்கப்பட்டார்.
தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை நிலவியதால், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருமான வரித்துறை சென்றனர். வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து, நான்கு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் மாலையில் சோதனை சொய்வதற்காக போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். சோதனை நடக்க இருந்த கொங்கு மெஸ் மணி, துணை மேயர் தாரணி சரவணன், பால விநாயகர் பூளு மெட்டல்ஸ் உரிமையாளர் தங்கராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளதால் அவர்களின் வீடுகளில் சோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருமான வரித்துறை திரும்பி சென்றனர்.
ஆனால் ஒரு இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடைபெற்று வருகிறது. காந்திகிராம் பகுதியில் உள்ள பிரேம் குமார் இல்லம், பால விநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் சொந்தமான சின்னாடாங் கோவில் பகுதில் உள்ள இடங்களில் சோதனை, க.பரமத்தி பகுதியில் உள்ள கிரஷர் உள்ளிட்ட இடங்களிள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சுமார் 150 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கரூருக்கு வருகை புரிந்துள்ளனர்.
நள்ளிரவில் முடித்துவிட்டு ஓய்வுக்கு சென்றுள்ள ஐடி அதிகாரிகள், மீண்டும் சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஐ போலீசார் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பணியில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து மீண்டும் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது தெரிய வருகிறது.