கூட்டணி குறித்து பேச நீ யார்… வெளியே போ : திமுக அலுவலகத்தில் காங்., எம்பி ஜோதிமணி அவமதிப்பு.. உச்சகட்ட மோதலில் திமுக – காங்கிரஸ்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
31 January 2022, 2:09 pm

கரூர் : கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய திமுகவினர்.

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார்..? வெளியே போ..? என்று திமுகவினர் ஒருமையில் பேசியதாக தெரியவருகின்றது.

தொடர்ந்து வெளியேறிய ஜோதிமணி பேச்சவார்த்தையின்போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக ஜோதிமணி குற்றச்சாட்டு வைத்ததோடு, பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா..? என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறி உள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திமுக அலுவலகம் முன் வாசலில் ஆவேசமாக பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ