பஞ்சாயத்து தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் கடத்தல் ; கரூரில் திமுக – அதிமுகவினர் மோதல் ; கூட்டத்தில் பறந்த செருப்பு… போலீசார் குவிப்பு!
Author: Babu Lakshmanan19 December 2022, 4:23 pm
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதிமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவிக்கான தேர்தல் சற்று நேரத்தில் நடக்க இருந்த நேரத்தில், ஏற்கனவே துணை தலைவர் வேட்பாளரும், அதிமுக கவுன்சிலருமான திருவிக என்பவர் கடத்தப்பட்டும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தாக்குதல் நடத்த முயற்சித்து அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், தற்போது அதிமுக கவுன்சிலர்கள் வாக்களிக்கும் செல்லும் போது திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே தடுத்து அவர்களது காரை தாக்கினர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிமுகவினர் குவிந்த நிலையில், திமுக வினரும் குவிந்தனர். முதலில் திமுக பிரமுகர்களிடம் இருந்து பறந்த செருப்புகள் போலீஸாரிடம் விழுந்தது.
மாறி, மாறி திமுகவினரும், அதிமுகவினரும் செருப்பை வீசி கொண்டனர். இந்த சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு விற்கு பின்பு ரோப் போடப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.