சிறுவனை ரவுண்டு கட்டிய தெருநாய்களின் கூட்டம்… நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துமா நகராட்சி நிர்வாகம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
31 October 2022, 9:31 pm

கரூர் அருகே 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூகவலை பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கின்றது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், எட்டு நாய்களுக்கு மேல் சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உடனடியாக பொதுமக்கள் உதவியதால் சிறுவன் உயிர் தப்பினார். உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

https://player.vimeo.com/video/765758635?h=bb3c68dff6&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!