கச்சத்தீவு திருவிழா தேதி அறிவிப்பு… 8,000 பக்தர்களை அனுமதிக்க இலங்கை அரசு முடிவு!!

Author: Babu Lakshmanan
27 ஜனவரி 2023, 1:30 மணி
Quick Share

கச்சத்தீவுத் திருவிழா நடக்கும் தேதியை அறிவித்த இலங்கை அரசு, இந்திய, இலங்கை சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க அனுமதியளித்துள்ளது.

கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலயத்தில் வருடந்தோறும் மார்ச் மாதத்தில் இந்திய, இலங்கை பக்தர்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்து நோக்கத்தோடு, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழா நடத்துவது குறித்து இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை, இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

பின்னர் வருகின்ற மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் இந்திய, இலங்கையைச் சேர்ந்த சுமார் 8,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 480

    0

    0